"விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - மின்வாரியம் எச்சரிக்கை
சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது...
"விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" - மின்வாரியம் எச்சரிக்கை
சீருடை விதிகளைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும் எனவும் விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மின்வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது
பணியில் உள்ள பெண்கள், சேலை, சல்வார், துப்பட்ட வாவுடன் சுடிதார் அணிந்து கொள்ளலாம் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும், பணியில் உள்ள ஆண்கள் பார்மல் பேண்ட், வேட்டி மற்றும் தமிழக, இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் எந்த உடையையும் அணியலாம் என குறிப்பிட்டது. அலுவலகத்தின் கண்ணியம், ஒழுக்கம் போன்றவற்றை பேணும் வகையில் அனைத்து ஊழியர்களும் சீருடை விதிகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.