கம்முன்னு வந்த புயல்..29ஆம் தேதி காத்திருக்கும் ட்விஸ்ட் - வானிலை மையம் எச்சரிக்கை

Update: 2023-10-25 11:55 GMT

மதுரை, திருச்சி, தஞ்சை உட்பட 14 மாவட்டங்களில், வரும் 29ம் தேதி கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.வடகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய மிக தீவிர புயல் ஹாமூன், புயலாக வலுவிழந்து வங்கதேச கரையை தெற்கு சிட்டகாங்-கிற்கு அருகில் கடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கேரளா மற்றும் தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில், வரும் 28ம் தேதி வரை, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது. வரும் 29ம் தேதி, மதுரை, திண்டுக்கல், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை, விழுப்புரம், கடலூர், சிவகங்கை, பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்காலில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியசாக இருக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்