பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்.. வெளியான அடுத்த அதிரடி அப்டேட்

Update: 2024-02-24 01:52 GMT

இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம் சார்பாக வரும் பிப்ரவரி 26-ஆம் தேதி முதல், தமிழகத்தில் உள்ள மாவட்ட தலைநகரங்களில் போராட்டம் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு, சம ஊதியம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றக் கோரி, கடந்த 5 நாள்களாக டிபிஐ வளாகத்தில் முற்றுகை போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்கள் போராட்டம் குறித்து அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி முடிவுக்கு கொண்டு வராத காரணத்தினால், போராட்டத்தை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளுக்குள் அரசு தங்களை அழைத்துப் பேசி கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால், வரும் திங்கள்கிழமை முதல் மாவட்ட தலைநகரங்களில் உள்ள முதன்மை கல்வி அலுவலகத்தில் போராட்டம் நடத்தப்படுமென அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்