பரவி வரும் டெங்கு.. மருத்துவமனையில் தமிழிசை திடீர் ஆய்வு | Dengue fever | Puducherry

Update: 2023-09-15 02:19 GMT

புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் 2 பேர் உயிரிழந்ததன் எதிரொலியாக, அரசு தலைமை மருத்துவமனையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆய்வு மேற்கொண்டார். சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சென்று, சிகிச்சை ஏற்பாடுகள் குறித்து மருத்துவர்களிடமும், சிகிச்சை பெற்று வருவோரிடமும் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தரராஜன், டெங்கு நோய் சிகிச்சைக்கு தேவையான, ரத்த வங்கி உட்பட அனைத்து வசதிகளும் தயார் நிலையில் உள்ளது என்றார். மக்கள் அச்சப்படத்தேவையில்லை என்ற அவர், மக்களின் ஒத்துழைப்பும் விழிப்புணர்வோடும் இருந்தால் டெங்கு பரவாமல் தடுக்கலாம் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்