மயிலாடுதுறை மாவட்டம் ஆச்சாள்புரம் மேல வீதியை சேர்ந்த பாலாஜி என்பவரின் காரில் நான்கு அடி நீளமுள்ள நாகபாம்பு ஒன்று கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காரின் உரிமையாளர் பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் அளிக்கவே விரைந்து வந்த வீரர் காரின் ஒவ்வொரு பகுதியாக பிரித்து பாம்பை பிடிக்க முற்பட்டபோது அது காரின் ஏர்பகுதிக்கு சென்றுவிட்டதால் நான்கு மணி நேரம் போராட்டம் வீணாது. பாம்பை வெளியில் எடுக்க முடியாமல் போனதால் காரின் உரிமையாளர் வேதனை அடைந்துள்ளார்.