நீலகிரி மாவட்டம் குன்னூர் அரசு பேருந்து பணிமனையில் டீசல் நிரப்பும் இடத்தில் பாம்பு இருப்பதை கண்ட தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் ஒரு மணி நேரம் போராடி ஐந்து அடி கொண்ட கட்டுவிரியன் பாம்பை லாவகமாக பிடித்தனர்.