கீழடி அகழாய்வில் யானை தந்தத்தினாலான ஆட்டக்காய் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு பணி நடைபெற்று வருகிறது. தற்போது வரை இரண்டு குழிகள் தோண்டப்பட்டு அகழாய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்று அகழாய்வின்போது 120 சென்டி மீட்டர் ஆழத்தில் யானை தந்தத்தினாலான கருப்பு நிற ஆட்டக்காய் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
தந்தத்தினால் செய்யப்பட்ட ஆட்டக்காய் கிடைத்திருப்பதன் வாயிலாக கீழடியில் மேம்பட்ட தமிழச் சமூகம் வாழ்ந்தற்கானச் சான்றாக இது கிடைத்துள்ளதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.