சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் தர்ணாவில் ஈடுபட்ட உடற்கல்வி ஆசிரியரை போலீசார் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பணியிட மாற்றத்தை கண்டித்து உடற்கல்வி ஆசிரியர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தனது குழந்தைகளுடன் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அவரை போலீசார் ஆட்சியர் அலுவலகத்துக்குள் இழுத்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.