தமிழ் படிக்க விரும்பும் நாகாலாந்து மாணவிக்கு சீட் தர, சிங்கம்புணரி அரசுப்பள்ளி மறுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகாலாந்தை பூர்வீகமாக கொண்ட ரூத் என்பவர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்தார். கொரோனா காலத்தில் சொந்த மாநிலத்திற்கு சென்ற ரூத், தற்போது மீண்டும் சிங்கம்புணரி திரும்பியுள்ளார். இந்நிலையில் ரூத்தின் மூத்த மகள் அக்ம்லா, தமிழ் படிக்க விரும்பிய நிலையில், சிங்கம்புணரி அரசு பெண்கள் பள்ளியில் 11-ஆம் வகுப்பில் சேர அனுமதி கோரப்பட்டுள்ளது. ஆனால் அக்ம்லாவுக்கு சீட் தர அனுமதி மறுத்த பள்ளி நிர்வாகம், அவரது தங்கைக்கு எட்டாம் வகுப்பில் சேர அனுமதி வழங்கியுள்ளது. இல்லாத சான்றிதழ்களை கேட்டு பள்ளி நிர்வாகம் அலைக்கழிப்பதாகவும், அலட்சியமாக நடத்துவதாகவும் அந்த மாணவி வேதனை தெரிவித்துள்ளார்.