ஒரு நம்பரால் ரூ.1 கோடியை பறிகொடுத்த நபர் - பத்திரப்பதிவு செய்யும்போது மிக மிக உஷார் மக்களே
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில்
ஒன்றை கோடி ரூபாய் மதிப்புள்ள இடத்தை வேறொரு நபருக்கு பத்திரம் பதிவு செய்து கொடுத்ததாக பத்திரப்பதிவு பதிவாளரிடம் இடத்தின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அப்போது தவறாக பதிவு செய்து கொடுத்து விட்டேன் ரத்து செய்து விடுகிறேன் என பதிவாளர் விளக்கம் அளித்தது இன்னும் சர்ச்சை ஏற்படுத்தியது. திருச்சி ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலை அருகே உள்ள
மரிய செங்கோல்லின் 149 ஆவது பிளட்டை முனியாண்டி என்பவர் 150 என மாற்றி அந்த இடத்தை வேறொரு நபருக்கு பத்திரப்பதிவுத் துறையில் விற்பனை செய்துள்ளதால் இந்த சர்ச்சை எழுந்துள்ளது.