மருத்துவமனையை பரப்பாக்கிய ஒற்றை நபர் - வெளியான காட்சி

Update: 2024-08-18 11:57 GMT

சிவகங்கை அரசு மருத்துவமனையில் மனநலம் பாதிக்கப்பட்ட நபர், பாதுகாவலரை தாக்கியதுடன், இரும்பு கதவின் மீது ஏறி வித்தை காட்டியதால் நோயாளிகள் ஓட்டம் பிடித்தனர். காளையார் கோவிலை சேர்ந்த சரவணன் என்பவருக்கு மனநோய் முற்றிய நிலையில், சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஆம்புலன்ஸில் இருந்து இறங்க மறுத்த சரவணன், இரும்பு கதவின் மீது ஏறி ஆவேசமாக கத்தியபடி வித்தை காட்டியதால் பிற நோயாளிகள் சிதறி ஓடினர். மருத்துவமனை பாதுகாவலர்களை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவரது கைகள் கட்டப்பட்டு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்