கடையில் திடீர் ரெய்டு -பாட்டில் பாட்டிலாக சிக்கிய பொருட்கள் -ஷாக்கில் உறைந்த அதிகாரி
மானாமதுரை புதிய பேருந்து நிலையம் பகுதியில் செயல்பட்டு வரும் பேக்கரியில் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார்கள் வந்தன. இதையடுத்து, உணவுத்துறை பொறுப்பு அலுவலர் சரவணகுமார் அதிரடி சோதனை மேற்கொண்டார். இதில், சுமார் 5 லிட்டர் அளவிலான குளிர்பானம் மற்றும் உணவு பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. தொடாந்து, கடை உரிமையாளருக்கு மூவாயிரம் அபராதம் விதிக்கப்பட்டதுடன், கடை நிரந்தரமாக சீல் வைக்கப்படும் அதிகாரிகள் எச்சரித்துள்ளார்.