சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட திருப்பத்தூர் சாலையில் 2 மாதங்களுக்கு முன்பாக புதிய சாலை போடப்பட்டது. அப்போதே சாலை தரமில்லை மக்கள் குறை கூறிய நிலையில் சாலைகள் மேடு பள்ளமாகிவிட்டது. அதனை சரிசெய்ய வந்த நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் தார் கலவையை பள்ளங்களில் போட்டு அதனை மண் வெட்டியை கொண்டும், மரக்கட்டையை கொண்டும் அடித்து சாலையை சரிசெய்த புதிய டெக்னாலஜியை பார்த்து அப்பகுதி மக்கள் வியந்து சென்றனர்.