காட்டுக்குள் கேட்ட அலறல் சத்தம்.. திருமணமான பெண்ணை மாறி மாறி சீரழித்த 5 பேர்

Update: 2024-09-18 16:04 GMT

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த இளைஞர் அரவிந்த். இவர் தாயமங்கலம் செல்லக்கூடிய சாலை அருகே உள்ள முந்திரிகாடு பகுதி அருகே திருமணமான பெண் ஒருவருடன் பேசிக் கொண்டிருந்து இருக்கிறார். அப்போது அங்கு வந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் அரவிந்தை சரமாரியாகத் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் அவருடன் இருந்த திருமணமான பெண்ணை கடத்தி சென்ற ஐந்து பேர் கொண்ட கும்பல் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர் படுகாயம் அடைந்த அரவிந்த் தனது இரு சக்கரவாகனத்தில் மூலம் அந்த பெண்ணை பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு இருக்கிறார். தொடர்ந்து அரவிந்த்துக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், இது குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் அரவிந்திடம் நடத்திய விசாரணையில் மேற்கண்ட சம்பவம் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்