ஹாஸ்பிட்டலை மூட சாலை மறியல்.. பெரும் பரபரப்பு

Update: 2024-09-02 13:44 GMT

தவறான சிகிச்சை அளித்ததால், ஒருவர் இறந்ததாக கூறி, சீர்காழி அருகே தனியார் மருத்துவமனையை முற்றுகையிட்டு, உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கீழவள்ளம் கிராமத்தை சேர்ந்த 48வயதான ஆனந்தன், நெஞ்சுவலி காரணமாக கொள்ளிடம் பகுதியில் உள்ள விஷ்ணு என்ற தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி ஆனந்தன் திடீரென இறந்தார். இதனை அறிந்த அவரது உறவினர்கள் தனியார் மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளித்ததால் தான் ஆனந்தன் உயிர் இழந்ததாக கூறி மருத்துவமனையை முற்றுகையிட்டனர் .மருத்துவமனையை மூட வலியுறுத்தியும் சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது நடவடிக்கை எடுக்க கோரியும் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் சீர்காழி -சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்படைந்தது. போலீசார் நடத்திய பேச்சுவார்த்தைக்கு பின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்