"ஒழுங்காய் பாடு படு வயல் காட்டில்.. உயரும் உன் மதிப்பு அயல் நாட்டில்" - நெல் அறுவடை செய்த மாணவர்கள்

Update: 2024-01-10 14:43 GMT

"சுழன்றும் ஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை" என்பதைப் போல் உழவின் மகிமையைக் கொண்டாட நெருங்கி விட்டது பொங்கல் திருவிழா... இதையடுத்து தனியார் பள்ளி மாணவர்கள் அவ்வையேலாக்கரை வயலில் கடந்த செப்டம்பரில் சுமார் 6 கிலோ பாரம்பரிய நெல்லான பூங்கார் இன வகையை நடவு செய்தனர்... இந்நிலையில், அறுவடைக்குத் தயாரான நெற்பயிர்கள், அறுவடை உபகரணங்களை ஆசிரியர்களுடன் ஆரத்தி எடுத்து வணங்கி, தாங்களே அறுவடை செய்து தலையில் சுமந்து சென்றனர்... தொடர்ந்து கதிரடித்து நெல்மணியைப் பிரித்து எடுத்து அசத்தினர்... இந்த நெல்லைக் காய வைத்து பொங்கலன்று பள்ளியில் பொங்கலிடன் உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்...

Tags:    

மேலும் செய்திகள்