சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து அதிகரித்துள்ளதால், தக்காளி 5 ரூபாய் சரிந்து ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரே நாளில் தக்காளி விலை திடீரென 10 ரூபாய் உயர்ந்த நிலையில், இன்று 5 ரூபாய் குறைந்துள்ளது.
பெரிய வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் தரத்திற்கு ஏற்ப ஒரு கிலோ 90 ரூபாய் முதல் 120 ரூபாய் வரை விற்பனையாகிறது. இதர பச்சை காய்கறிகளின் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் உள்ளது.