சோமங்கலத்தில் இயங்கி வரும் அரசு மாதிரி மேல்நிலை பள்ளியில், 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் பள்ளி வளாகத்தில், காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் தொடர்பு முகாம் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி கலந்து கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.
ஆனால் பள்ளியில் வகுப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே அரசு நிகழ்ச்சி நடைபெற்றது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது. ஒலிபெருக்கி சத்தம், ஜெனரேட்டம் சத்தம் என மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் பள்ளி வளாகம் என்று கூட பாராமல் சினிமா பாடல்களும் ஒலிக்கப்பட்டதால் சர்ச்சையானது.
மாணவர்களின் நலனில் அக்கறை கொள்ள வேண்டிய மாவட்ட ஆட்சியரே, மாணவர்களின் படிப்பு பாதிக்கப்படும் என்று சிந்திக்காமல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.