கடலில் மூழ்கி உயிரிழந்த பள்ளி மாணவர்கள்... முதல்வர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளையில் கடலில் மூழ்கி உயிரிழந்த 3 பள்ளி மாணவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடற்கரைக்கு குளிக்கச் சென்ற போது 3 பள்ளி மாணவர்கள் எதிர்பாராதவிதமாக கடல் நீரில் மூழ்கி உயிரிழந்தனர் என்ற செய்தியை கேட்டு வேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார். உயிரிழந்த சிறுவர்களின் பெற்றோர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்வதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.