கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து அவதூறு பரப்பியதாக தொடரப்பட்ட வழக்கில், சவுக்கு சங்கரிடம் காவல்துறையினர் 6 மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர், எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, விசாரணையை அடுத்த மாதம் 7ஆம் தேதிக்கு, நீதிபதி கோதண்ட ராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து, சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுபடி, கோவை சிறைக்கு சவுக்கு சங்கரை கொண்டு செல்லாமல், புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.