ஸ்ட்ராங் ரூமில் திடீர் மாற்றம்.. பறந்த முக்கிய உத்தரவு | Sathya Pratha Sahoo | Thanthitv
தமிழகத்தில் வாக்கு எண்ணும் மையங்களில், சில இடங்களில் அவ்வபோது கண்காணிப்புக் கேமராக்கள் செயலிழப்பது போன்ற சம்பவங்கள் ஏற்படுகின்றன. இது தொடர்பாக தமிழகத் தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது கண்காணிப்பு கேமராக்கள் பழுதின்றி செயல்பட எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், வாக்கு எண்ணிக்கை ஏற்பாடுகள், வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடுவோருக்கு பயிற்சி அளித்தல், மைக்ரோ பார்வையாளர்கள் நியமித்தல் ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், ஸ்டிராங் ரூம் முன்பாக கூடுதலாக ஒரு சிசிடிவி பொருத்த தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டார். வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடும் ஊழியர்களுக்கு 20 ஆம் தேதி முதல் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.