சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு - இன்று மீண்டும் விசாரணை
சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கு விசாரணை இன்று மீண்டும் நடக்கிறது. மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்னிலையில், இந்த வழக்கின் விசாரணை நேற்று நடைபெற்றது. அப்போது முன்னாள் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர் ரகு கணேஷ் உள்ளிட்ட 9 காவலர்களும் ஆஜராகினர். தலைமை காவலர் பியூலா செல்வகுமாரி நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் முன்னாள் காவலர் பாலகிருஷ்ணனின் வழக்கறிஞர் தரப்பில் குறுக்கு விசாரணை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, எதிரிகள் தரப்பு குறுக்கு விசாரணைக்காக, வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது.