கோபித்து சென்ற மனைவியை வரவழைக்க ஆயுள் கைதியின் மாஸ்டர் பிளான்.. அரண்ட மத்திய சிறை போலீசார்

Update: 2024-08-20 08:51 GMT

சேலம் மத்திய சிறையில் உள்ள ஆயுள் தண்டனை கைதி ஒருவர், தனது மனைவி, தன்னை பார்க்க வரவழைப்பதற்காக அதிக மாத்திரைகளை உட்கொண்டு மருத்துவமனையில் சேர்ந்த சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

சேலம் சின்னகொல்லப்பட்டி பகுதியை சேர்ந்த கோழி பிரகாஷ் என்பவர் கொலை வழக்கில் ஆயுள்தண்டனை பெற்று, கடந்த 2016-ம் ஆண்டு முதல், சேலம் மத்திய சிறையில் தண்டனை பெற்று வருகிறார்.

மனைவி உடல்நல பாதிப்புக்காக இவர் பரோலில் சென்றபோது தகராறு ஏற்பட்ட நிலையில், இனி சந்திக்க வரப்போவதில்லை என, அவரது மனைவி கூறியதாகத் தெரிகிறது.

இந்நிலையில், தனக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாகக்கூறி, சுமார் 15 பாராசிட்டமால் மாத்திரைகளை பிரகாஷ் சாப்பிட்டுள்ளார்.

இதையடுத்து சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உடநலம் தேறியுள்ளார். இதுகுறித்த தகவலின்பேரில் அங்கு வந்த அவரது மனைவி, உடனிருந்து பார்த்து வருகிறார்.

இதனிடையே, தனது மனைவி தன்னை பார்க்க வரவழைப்பதற்காக பிரகாஷ் சக கைதிகளிடம் சவால் விடுத்ததாகவும்,

அதன்பேரில் அதிக மாத்திரைகளை சாப்பிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த விவகாரத்தில் பிரகாஷிற்கு உரிய தண்டனை கிடைக்கும் என சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்