சென்னை To சிங்கப்பூர்.. விமான சேவை தாமதம் - பயணிகள் தவிப்பு | Airport

Update: 2024-09-19 12:31 GMT

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் சிங்கப்பூர் விமானம் கால தாமதம் காரணமாக பயணிகள் அவதிக்குள்ளாகினர். அதிகாலை 1.40 மணிக்கு கிளம்ப வேண்டிய சிங்கப்பூர் விமானம் 6 மணி நேரம் தாமதமாக கிளம்பிச் சென்றது. அதே போன்று, சிங்கப்பூரில் இருந்து நேற்று இரவு 11.40 மணிக்கு சென்னை வந்து சேர வேண்டிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம், தாமதமாக இன்று காலை 6.30 மணிக்கு சென்னை வந்து சேர்ந்தது. இது குறித்து, பெரும்பாலான பயணிகளுக்கு முறையான தகவல் சென்று சேரவில்லை. இதன் காரணமாக பயணிகள் பல மணி நேரங்கள் காத்திருந்து அவதிக்குள்ளாகினர்.

Tags:    

மேலும் செய்திகள்