சேலம் மரவனேரி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் கீர்த்தனா. இவருக்கு அருண்குமார் என்பவருடன் திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ள நிலையில், கணவர் போதைப் பழக்கத்திற்கு அடிமையானதால் அவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், குழந்தையுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்த கீர்த்தனாவிடம், குழந்தையை தன்னிடம் ஒப்படைக்குமாறு கணவர் வற்புறுத்துவதாகவும், தர மறுத்தால் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுப்பதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இது குறித்து போலீசில் புகாரளித்தும் நடவடிக்கை இல்லை எனக் கூறிய கீர்த்தனா, தன் தந்தை மற்றும் சகோதரியுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து உயிருக்கு பாதுகாப்பு கோரி புகாரளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.