ஓமலூரில் மாயமான திருமணம் நிச்சயமான இளைஞரை போலீசார் மீட்டனர். சேலம் மாவட்டம் ஓமலூர் மாஜித் தெருவில் குடும்பத்துடன் வசித்து வந்த ராஜஸ்தான் இளைஞருக்கு திருமண நிச்சயதார்த்தம் முடிந்துள்ளது. இந்நிலையில் துணி எடுக்க சென்ற ரமேஷ்குமாரை காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரை அடுத்து சென்னையில் இருந்த ரமேஷ்குமாரை போலீசார் மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.