கான்கிரீட் வீடே இல்லாத கிராமம்.. "மீறி கட்டினால் மரணம்".. வினோத நம்பிக்கைகளை நம்பும் மக்கள்..

Update: 2024-06-29 18:09 GMT

வீடு கட்ட ஆசையுள்ள ஒவ்வொருவரும் கான்கிரீட் வீடுகளையே கட்டி வருகின்றனர்.. அது தான் உலக வழக்கமும் கூட...

ஆனால், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே மல்லியகரை ஊராட்சியில் உள்ள குக்கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு அது கனவில் கூட நடக்காத ஒன்று...

மல்லியகரை ஊராட்சியில் கருத்தராஜபாளையம், பெரியார் நகர், ஜீவா நகர், கும்பம் கொட்டாய், இந்திரா நகர், போயர் காலினி உள்ளிட்ட பகுதியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்..

என்னதான் கை நிறைய காசு இருந்தாலும், மாடி வீடு என்ற பேச்சுக்கே இடமில்லையாம் இந்த ஊரில்.. ஊர் முழுவதும் ஓட்டு வீடுகளும், கூரை போட்டு மூடப்பட்ட வீடுகளும் தான் தென்படும்..

காரணம் இந்த ஊர் மக்கள், குலதெய்வமான பெரியசாமி இரவு நேரத்தில் ஊரை சுற்றி வருவதாக நம்புகின்றனர். பெரியசாமி கோயில் பள்ளத்தில் உள்ளதால், கான்க்ரீட் தளம் அமைத்து மாடி வீடாக இங்கு யாரும் வீட்டை கட்டுவதில்லை..

இப்படி 150 ஆண்டுகளாக இந்த பழக்கத்தை கடைபிடித்து வரும் மக்கள், ஒருவேளை மாடி வீடு கட்ட ஆசைப்பட்டால், கிராமத்திற்கு வெளியே சென்று வீடு கட்டி வசித்து வருகின்றனர்..

இருபதாம் நூற்றாண்டு முதலே இதனை கடைப்பிடித்து வரும் மக்கள், மீறினால் உயிரிழப்பு நேரிடும் என்ற நம்பிக்கையிலும் இருக்கிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்