டேங்கர் லாரியில் திடீர் சத்தத்தோடு வந்த வெள்ளை புகை... நொடி பொழுதில் மெகா விபத்தை தடுத்த டிரைவர்
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சென்ற டேங்கர் லாரியின் பின் பகுதியில் வெண்ணிற புகையுடன் சப்தம் வருவதை கண்ட லாரி ஓட்டுனர் இசக்கி பாண்டி, அதிர்ச்சி அடைந்து, உடனடியாக லாரியை, ஆள் நடமாட்டம் இல்லாத சர்வீஸ் சாலையில் நிறுத்தினார். இதனையடுத்து தகவல் அறிந்து அங்கு விரைந்து வந்த சங்ககிரி தீயணைப்பு துறையினர் டேங்கர் லாரியில் பெரும் விபத்து ஏற்படாமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். டேங்கர் லாரி ஓட்டுனரின் சாமர்த்தியதால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் இச்சம்பவம் குறித்து சங்ககிரி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.