சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, பாதை பிரச்சினை தொடர்பாக இருதரப்பினர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர்.
பெரமச்சூர் கிராமத்தில், இரு தரப்பினரிடையே பாதை தொடர்பாக பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில், ஒரு தரப்பினர் பொக்லைன் இயந்திரத்தைக் கொண்டு பாதையை தோண்டியதாக தெரிகிறது. இதனை எதிர்தரப்பினர் தடுத்துள்ளனர். இதனால், இருதரப்பினரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் இருதரப்பிலும் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றனர். இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே, பெண்கள் ஒருவரையொருவர் தாக்கிக் கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.