ரூ.1000 திட்டம்.. மாறியுள்ள சில பெண்களின் கணவர்கள் பெயர் - மாற்றி தருமாறு கோரிக்கை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில், சிலருக்கும் பணம் வரவில்லை என புகார் எழுந்தது. இந்நிலையில் சில பெண்களின் கணவர்களின் பெயரை மாற்றி பதிவிட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பணம் வரவில்லையென்றாலும் கூட பரவாயில்லை.. ஆனால் தன்னை வேறொருவரின் மனைவி அரசு பதிவேடுகளில் குறிப்பிட்டால் என்ன செய்வது என அப்பகுதி பெண்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.