தமிழகத்தில் அனைத்து நியாய விலைக்கடைகளுக்கும் நாளை பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. மே மாதத்திற்கான சிறப்பு பொது விநியோகத் திட்ட பொருட்களின் இயக்கத்தினை காலக்கெடுவுக்குள் முடித்திடும் வகையில் இந்த அறிவிப்பை, உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது. இதற்கு ஈடான விடுமுறை நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.