"நிறைவேறிய ஆசை.. சாந்தியடைந்த டாடாவின் ஆன்மா"
குஜராத்தில் ஏர்பஸ் சி-295 விமானங்களை தயாரிக்கும் டாடா மையம் திறக்கப்பட்டது.ஸ்பெயினின் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து இந்திய விமானப்படைக்கு சி-295 ரக விமானங்கள் வாங்கப்படுகிறது. ஏர்பஸ் நிறுவனம் 16 விமானங்களை நேரடியாக வழங்குகிறது. 40 விமானங்களை வதோதராவில் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவில் தயாரிக்கிறது. குஜராத்தில் விமானங்களை உற்பத்தி செய்வதற்கான டாடா வளாகத்தை பிரதமர் மோடியும், ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செசும் இணைந்து தொடங்கி வைத்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி 30 மடங்கு அதிகரித்து இருப்பதாக நெகிழ்ந்தார். மறைந்த தொழில் அதிபர் ரத்தன் டாடாவுக்கு அஞ்சலி செலுத்தியவர், இந்த திட்டத்தின் பின்னணியில் அவர் இருந்ததாகவும், அவரது ஆன்மாக மகிழ்ச்சியாக இருக்கும் என்றார்.