முற ையாக இன்சூரன்ஸ் தொகை வழங்காவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்டு விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பங்கேற்ற திருவாடானை தாலுகா விவசாயிகள், பயிர் பாதிப்பு குறித்து கணக்கெடுப்பு நடத்தியும் இன்சூரன்ஸ் தொகை வழங்கவில்லை என்றனர். மேலும், இன்சூரன்ஸ் நிறுவனம் ஊழல் செய்திருப்பதாகவும் குற்றம் சாட்டினர். இன்சூரன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால், அடுத்தகட்டமாக பேருந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், தேர்தலை புறைக்கணிக்கப் போவதாகவும் விவசாயிகள் எச்சரித்துள்ளனர்.