பள்ளி கழிப்பறையில் தகாத வார்த்தைகள்? - தலைமை ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்குதல்.. பரபரப்பு சம்பவம்

Update: 2024-10-28 03:30 GMT

பள்ளி கழிப்பறையில் தகாத வார்த்தைகள்? - தலைமை ஆசிரியர் மாணவர்கள் மீது தாக்குதல்.. பரபரப்பு சம்பவம்

மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாணவனின் உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ராமேஸ்வரம் அடுத்த பேய்க்கரும்பு பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளி கழிப்பிடத்தில் தகாத வார்த்தைகளில் சில வாசகங்கள் எழுதி இருந்ததாகவும், அதைக் கண்டு மாணவர்கள் சிரித்தபடி கழிப்பறையை விட்டு வெளியே வந்ததாகவும் தெரியவருகிறது. இதை அறிந்து ஆத்திரமடைந்த தலைமை ஆசிரியர் ஷாலினி, சிரித்த 10 மாணவர்களை 2 நாட்களாக கடுமையாக அடித்ததாக கூறப்படுகிறது.

இதனால் உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில், ஒரு மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதை அறிந்து ஆத்திரமடைந்த மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தனியார் பள்ளியை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சம்பவ இடத்தில் ராமேஸ்வரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள நிலையில், இது தொடர்பாக "சைல்டு லைன்" அதிகாரிகளும் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்