கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் அடித்து விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 5 படகுகளில் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்ச தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்துள்ளனர். அப்போது அங்கு ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் தங்கள் மீது கற்களை கொண்டு தாக்கியதுடன் மீன் பிடிக்க விடாமல் அடித்து விரட்டியதாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.