வீதியில் கதறும் பெற்றோர்... சொத்துக்களை பிடிங்கி விரட்டியடித்த மகள் - நெஞ்சை ரணமாக்கும் கொடுமை
கடைசி வரை வைத்துக் காப்பாற்றுவதாகக் கூறி சொத்துகளை எழுதி வாங்கிக் கொண்டு விரட்டி விட்ட மகளிடம் இருந்து சொத்துக்களை மீட்டுத் தரக்கோரி வயது முதிர்ந்த தம்பதி அழுது கொண்டே ஆட்சியரிடம் மனு அளித்த சோக சம்பவம் ராமநாதபுரத்தில் நிகழ்ந்துள்ளது.
கீழக்கரை அருகே உள்ள காஞ்சிரங்குடி கிராமத்தைச் சேர்ந்த 75 வயது மூதாட்டி பூச்செண்டு தன்னுடைய 90 வயது கணவர் கார்மேகத்துடன் ஆட்சியரை நேரில் சந்தித்து கண்ணீர் மல்க மனு அளிக்க வந்தார்... 5 குழந்தைகளைப் பெற்ற தன்னையும் தனது கணவரையும் மூத்த மகள் சரஸ்வதி வைத்துக் காப்பாற்றுவதாகக் கூறியதால், தன் கணவரின் சுய சம்பாத்தியத்தில் வாங்கிய 27 சென்ட் தோட்டத்தை சரஸ்வதி பெயருக்கு எழுதி கொடுத்ததாகவும், ஆனால் அதன்பிறகு தங்களை மகள் விரட்டி விட்டதாகவும் கண்ணீர் மல்க மூதாட்டி பூச்செண்டு தெரிவித்தார்... மனுவைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் தன் கையிலிருந்த ஆயிரம் ரூபாய் பணத்தைத் தந்து உதவி, மனு மீது நிச்சயம் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த சம்பவம் கலங்க வைத்தது.