இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 18-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை தமிழகத்தின் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2, 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்க கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.