நாணயம் வெளியீட்டு விழாவில் ராகுல் எங்கே..? மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி -முடித்து விட்ட ராகுல்

Update: 2024-08-19 06:09 GMT

நாணயம் வெளியீட்டு விழாவில்

ராகுல் எங்கே..? ஏன் இல்லை?

மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி

ஒரே போடு... முடித்து விட்ட ராகுல்

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவை குறிக்கும் வகையில், அவரது உருவம் பொறித்த நூறு ரூபாய் நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், சென்னையில் வெளியிட்டார்.

முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் பங்கேற்பதற்காக டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்த மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய கடலோர காவல்படையின் அதி நவீன கடல்சார் மீட்பு மற்றும் ஒருங்கிணைப்பு மையத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து, சென்னை மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திய ராஜ்நாத் சிங், கலைஞர் அருங்காட்சியகத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் கலைவாணர் அரங்கில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு நினைவாக, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட்டார்.

இதனிடையே, முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி எழுதியுள்ள கடிதத்தில், இலக்கியம், அரசியல் மற்றும் சமூகத்தில் உயர்ந்த ஆளுமையாக விளங்கியவர் கருணாநிதி என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், கருணாநிதி போன்ற தலைவர்களின் தொலைநோக்கு பார்வையும், எண்ணங்களும் 2047ம் ஆண்டுக்குள் வளர்ச்சி அடைந்த இந்தியா என்ற பயணத்திற்கு உதவும் என்றும் பிரதமர் கூறியுள்ளார்.

இதேபோல, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், கருணாநிதியின் கொள்கைகள் மற்றும் அர்ப்பணிப்பு, தமிழ்நாட்டை முன்னோடி மாநிலமாக மாற்றியதாக குறிப்பிட்டுள்ளார்.

நாணய வெளியீட்டு விழாவுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி மற்றும் ராகுல்காந்திக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்