கொளுத்திய ராகுல்.. இந்தியா கூட்டணியில் விரிசலா? | rahul gandhi

Update: 2024-09-02 09:02 GMT

டெல்லி போக்குவரத்து கழக பணியாளர்கள் தனியார் மயம் என்ற அச்சத்தில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பதாகக் கவலை தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி..டெல்லி போக்குவரத்து கழக பணியாளர்களுடன் சில நாள்களுக்கு முன்பு கலந்துரையாடிய ராகுல் காந்தி, அது குறித்த காட்சிகளை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்... டெல்லி போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை...நிலையான வருமானம் இல்லை...மற்றும் நிரந்தர வேலையும் இல்லை என தெரிவித்துள்ள அவர், பயணிகளின் பாதுகாப்பிற்காக நியமிக்கப்பட்ட ஊர்க்காவல் படையினர் கடந்த 6 மாதங்களாக சம்பளம் இல்லாமல் உள்ளதாகக் கவலை தெரிவித்தார். நாடு முழுவதும் உள்ள அரசு ஊழியர்களைப் போலவே டிடிசி ஊழியர்களும் தொடர்ந்து தனியார் மயமாக்கல் அச்சத்தில் உள்ளதாகத் தெரிவித்த ராகுல், தாங்கள் நிரந்தர குடிமக்கள் என்றால், வேலைகள் ஏன் தற்காலிகமானதாக இருக்கிறது என்ற கேள்வியை கனத்த மற்றும் சோகமான மனதுடன் அவர்கள் கேட்பதாக குறிப்பிட்டுள்ளார். இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஆம் ஆத்மி கட்சி டெல்லியில் ஆளுங்கட்சியாக உள்ள நிலையில், அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரும் சூழலில் டெல்லி அரசின் கீழ் உள்ள போக்குவரத்து கழகத்தின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சனையை சுட்டிக்காட்டி ராகுல் காந்தி பேசியிருப்பது கவனம் பெற்றுள்ளது. இதன் மூலம் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள தேர்தலில் ஆம் ஆத்மியும் காங்கிரசும் தனித்தனியே போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்