குவாரி அமைக்க மக்கள் எதிர்ப்பு...ஆபத்தில் விவசாய நிலங்கள் - சாலை மறியலால் பரபரப்பு

Update: 2024-01-29 14:48 GMT

சிவகங்கை மாவட்டம் மேலப்பிடாவூர் கிராமத்தில், கிராவல் குவாரி அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 300 ஏக்கருக்கும் மேல் விவசாயம் செய்து வருவதாகவும், கிராவல் குவாரி அமைத்தால் விவசாய நிலங்கள் முற்றிலும் பாதிக்கப்படும் என்றும், மக்கள் தெரிவித்தனர். பின்பு மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்த நிலையில், மக்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்