பெத்த வயிறை எரியவிட்ட மகன்.. சப்-கலெக்டர் செய்த தரமான சம்பவம்.. பிள்ளைகளுக்கு இது ஒரு பாடம்

Update: 2023-11-25 08:06 GMT

கன்னியாகுமரி மாவட்டத்தில் தாய், தந்தையை கவனிக்க தவறிய மகனின் சொத்து பத்திரத்தை ரத்து செய்ய பத்மநாபபுரம் சப் கலெக்டர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்... தேங்காபட்டணம் நெடுந்தட்டு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன் தனது மகன் சுனுக்கு கடந்த ஆண்டு 3 சென்ட் நிலத்தை செட்டில்மெண்டாக எழுதி கொடுத்துள்ளார். சொத்தை எழுதி வாங்கிய பின்னர் சுனு தினமும் மது அருந்தி விட்டு தாய், தந்தையை அடித்துத் துன்புறுத்தி வீட்டை விட்டு வெளியேற்றி உள்ளார். இதனால், மனவேதனையடைந்த விஸ்வநாதன் தனது மனைவியுடன் மகன் சுனு குறித்து பத்மநாபபுரம் சப் கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார். பத்மநாபபுரம் சப் கலெக்டர் கவுசிக் விசாரணை மேற்கொண்டு, விஸ்வநாதன் தனது மகன் சுனு பெயரில் பதிவு செய்து கொடுத்த ஆவணத்தை ரத்து செய்து அதிரடி உத்தரவை பிறப்பித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்