உக்ரைன் மீது ரஷ்யா 200 ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தியுள்ளது. உக்ரைன் நாட்டின் எரிசக்தி உட்கட்டமைப்பை குறி வைத்து, ரஷ்ய படைகள் ஒரே நேரத்தில் நடத்திய இந்த தாக்குதல்கள் பல மணிநேரம் நீடித்துள்ளன. உக்ரைன் தலைநகர் கீவிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தலைநகரில் கீவிலும் மின் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ரஷ்யா நடத்திய இந்த தாக்குதல் சம்பவங்களில் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்திற்கு உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.