இரும்பு குண்டை தரையில் உருட்டும் விளையாட்டு... 200க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்பு
புதுச்சேரியில் நடைபெற்றுவரும் பெத்தாங் விளையாட்டில் 200க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றுள்ளன. பிரான்ஸ் நாட்டைப் பாரம்பரியமாகக் கொண்ட இந்த விளையாட்டில், இரும்பு குண்டுகளை தரையில் உருட்டி விளையாடுவார்கள். இந்நிலையில், 2 நாட்கள் நடைபெறும் பெத்தாங் போட்டி உழவர்கரை அரசு பள்ளி விளையாட்டு மைதானத்தில் இன்று தொடங்கியது. 200க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வரும் இப்போட்டியை, ரஷ்யா நாட்டின் பெத்தாங் சங்க தலைவர் அலெக்சாண்டர் கொமராவா தொடங்கி வைத்தார்.