ராகுல் காந்தியின் உருவ பொம்மையை எரிக்க முயன்று சர்ச்சையை கிளப்பிய பாஜகவினர் - புதுவையில் பரபரப்பு

Update: 2024-02-11 02:56 GMT

ராகுல் காந்தியின் புகைப்படத்தை அவமதித்த பாஜகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, புதுச்சேரி டிஜிபியிடம் அம்மாநில காங்கிரஸ் கட்சியினர் புகாரளித்துள்ளனர். பிரதமர் மோடி குறித்து பொய்யான பிரசாரம் செய்ததாக, ராகுல் காந்திக்கு கண்டனம் தெரிவித்து புதுச்சேரி பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்தநிலையில், அப்போராட்டத்தின்போது ராகுல் காந்தியின் புகைப்படத்தை அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி, புதுவை காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் உள்ளிட்டோர் டிஜியிடம் புகாரளித்தனர். பின்னர் பேசிய வைத்திலிங்கம், ராகுல் காந்தியின் புகைப்படத்தை காலணியால் அடித்து அவமதித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனில், ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்