தென்காசியில் இன்று முதல் வரும் 21ம் தேதி வரை எட்டு நாட்கள் 144 தடை உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது. பச்சேரி கிராமத்தில் ஒண்டிவீரனின் வீரவணக்க நாளையொட்டி இன்று முதல் வரும் 21ஆம் தேதி வரையும், நெல்கட்டும்சேவலில் கொண்டாடப்பட உள்ள பூலித்தேவரின் 305வது பிறந்தநாளையொட்டி வரும் 30ம் தேதி முதல் செப்டம்பர் 2ம் தேதி வரையும் இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.