சென்டராக மோதிய கொடுத்த பிரைவேட் பஸ்.. மொத்தமாக நொறுங்கிய அரசு பஸ்

Update: 2024-08-14 06:59 GMT

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, அரசுப் பேருந்தும், தனியார் பேருந்தும் மோதிய விபத்தில், அரசுப் பேருந்தில் பயணித்த 10 பேர் காயமடைந்தனர். கள்ளக்குறிச்சியில் இருந்து ஈரோடு நோக்கி சென்ற அரசு பேருந்து, பள்ளிப்பாளையம் அருகே வந்த போது, நிலைத்தடுமாறி தனியார் பேருந்து மீது மோதியது. இதில் அரசு பேருந்து பயங்கரமாக சேதமடைந்த நிலையில், 7 பெண்கள் உட்பட 10 பேர் காயமடைந்தனர். விசாரணையில், மழை பெய்து சாலை ஈரமாக இருந்ததால், பிரேக் பிடித்த போது, பேருந்து நிற்காமல் விபத்து ஏற்பட்டது தெரியவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்