திருவாரூரில் தக்காளியின் விலை ஒரே நாளில் 40 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ 160 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அண்டை மாநிலங்களில் தக்காளி விளைச்சல் குறைந்ததால், வரத்தும் குறைந்து போய் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக தக்காளி ஒரு பெட்டிக்கு இன்று 700 ரூபாய் விலை ஏற்றம் கண்டுள்ளதாக வியாபாரிகள் குறிப்பிட்டனர். கடந்த 5 மாத காலமாக இஞ்சி விலை குறையவே இல்லை எனவும் கூறப்படுகிறது. இன்று ஒரு கிலோ இஞ்சி மொத்த விலையில் 250 ரூபாய்க்கும், சில்லறை விலையில் 310 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.