4ம் தேதி ரிசல்ட்.. போலீஸ் காவலில் "ஆபாச" பிரஜ்வல் எடுத்த திடீர் முடிவு

Update: 2024-06-01 03:50 GMT

ஆபாச வீடியோ வழக்கை விசாரித்து வரும் சிறப்பு விசாரணைக்குழு, கைது செய்யப்பட்ட பிரஜ்வல் ரேவண்ணாவை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த கோரிக்கை விடுத்த‌து. ஆனால், அதற்கு மறுப்பு தெரிவித்த நீதிமன்றம், ஜூன் 6ஆம் தேதி வரை 7 நாட்கள் மட்டும் போலீஸ் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ள அனுமதி அளித்த‌து. இதையடுத்து, ஆபாச வீடியோ புகார் உட்பட பல்வேறு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த உள்ளனர். 6ஆம் தேதி வரை எஸ்.ஐ.டி விசாரணை நடைபெற உள்ள நிலையில், பிரஜ்வல் ரேவண்ணா போட்டியிடும் ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியின் முடிவுகள் 4 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனிடையே, பிரஜ்வல் ரேவண்ணா சார்பில், ஜாமின் கோரி புதிய மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்