ஊராட்சி தலைவர், துணை தலைவரின் அதிகாரம் ரத்து... கலெக்டர் அதிரடி | Tenkasi
தென்காசி மாவட்டம் சீவநல்லூர் ஊராட்சி தலைவர் முத்துமாரி , துணை தலைவர் பட்டுராஜ் ஆகியோர் காசோலையில் கையொப்பமிடும் அதிகாரத்தை ரத்து செய்து தென்காட்சி ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். ஊராட்சி நிர்வாகத்தை சீர் செய்ய வட்டார அளவில் பலமுறை முயற்சி செய்தும் ஒருமித்த கருத்து ஏற்படாததால் இந்த நடவடிக்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காசோலையில் கையெழுத்திடும் அதிகாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு வழங்கப்பட்டுள்ளது.