சென்னை அருகே பேரதிர்ச்சி.. பெண்கள் விடுதி அருகே கேட்ட சத்தம்.. 2 நாள் கழித்து பார்த்ததும் பதறி போன பெண்

Update: 2024-02-16 05:47 GMT

சென்னையை அடுத்த பூந்தமல்லியில், தனியார் பெண்கள் விடுதி அருகே பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை குப்பையில் வீசப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பூந்தமல்லி ராமானுஜ கூட தெருவில் உள்ள தனியார் பெண்கள் விடுதி அருகே உள்ள குப்பை கொட்டும் இடத்தில் இருந்து, 2 நாட்களாக பூனைக்குட்டி அழுவது போன்று சத்தம் கேட்டது. அந்த இடத்தில் இருந்து பூனைக்குட்டி அழுவதாக நினைத்துக் கொண்டு அப்பகுதி மக்கள் அலட்சியமாக இருந்து விட்டனர். அந்த சத்தம் அதிகமானதால், அருகில் வசிக்கும் யுவராணி என்பவர் ஜன்னல் வழியாக பார்த்தபோது, அங்கு, பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தை எறும்புகள் மொய்த்த நிலையில் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அந்தக் குழந்தையை மீட்டு, பூந்தமல்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தார். அங்கு குழந்தைக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, மேல் சிகிச்சைக்காக எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து, பூந்தமலில்லி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து, சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்